முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
-ஏங்க வைத்த மலேசியா




வானுயர்ந்த கட்டடங்கள், வழுக்கும் சாலைகள் என்று மட்டும்தான் மலேசியாவை அநேகருக்கும் தெரியும். ஆனால்... சமீபத்தில் அங்கே சென்றுவந்த நம்மூர் இலக்கியவாதிகள் மலேசியாவின் மறுபக்கத்தையும் தரிசித்துத் திரும்பியுள்ளனர். எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ் சில் நாடன், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோரோடு மலேசியப் பயணம் முடித்துத் திரும்பிய கோவையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கனகலட்சுமியிடம் பேசினோம்.

‘‘சின்ன நாடான மலேசியா... சமூகம், அரசியல், பொருளாதாரம் என்று அனைத்து துறைகளிலும் நமது இந்தியாவுக்கு பெரிய பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் சந்தித்த சம்பவங்களையே சாட்சிகளாக்கலாம். எங்களது குழுவினருக்கு மலேசியாவின் கூட்டமைப்புப் பிரதேசம் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறை துணையமைச்சரும் தமிழருமான டத்தோ.மு.சரவணனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அங்கெல்லாம் அமைச்சரைப் பார்க்க வேண்டுமென்றால் ஆண்டவனைப் பார்ப்பது போல குதிரைக் கொம்பு கிடையாது. சக நண்பனை பார்ப்பதை விட அமைச்சர்களைப் பார்ப்பது மிகவும் எளிதான காரியமாக இருக்கிறது.

அன்று... மலேசிய பழங்குடியின மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா. அமைச்சர் டத்தோ சரவணனோடு நாங்களும் கலந்துகொண்டோம். பழங்குடி மக்களிடம் பேசிய டத்தோ சரவணன், ‘தலைநகர் கோலாலம்பூர்ல உடனே வீடு கிடைக்கறது கஷ்டம். அதனால்... அவுட்டர் சிட்டியில உடனே வீடுகள் கட்ட, ஏற்பாடு செய்யுறேன்’ என்று அவர்களிடம் சொல்ல... ‘என்ன டத்தோ... இப்படி சொல்றீங்க? சரி, எங்க புள்ளைங்க படிப்பு பாதிக்காம சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க’ என பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசுவதுபோல பரிச்சய பாஷையில் அமைச்சரிடம் பேசினார்கள் பழங்குடியின மக்கள்.

‘உங்களை டத்தோ என்றுதான் மக்கள் அழைப்பார்களா?’ என அமைச்சரிடம் கேட்டோம். ‘ஆமாம். உங்கள் ஊரில் பத்மஸ்ரீ, பத்மபூஷண் மாதிரிதான் இங்கே டத்தோ விருது. கூப்பிடுவதற்காகவே கொடுக்கப்பட்ட விருது என்று கூட சொல்லலாம்’ என சிரித்தார் அமைச்சர்.

அடுத்ததாக ஒரு தேவாலயத்தில் விழா... கூடியிருந்தவர்களில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி எழுந்து, ‘டத்தோ...’ என அமைச்சரைக் கூப்பிட, ‘உங்களுக்கு மார்க்கெட்டில் கடை வேணும். அதானே உங்கள் கோரிக்கை. உங்க தேவை என்னன்னு எனக்குத் தெரியும். ஆனா, போன முறையே உங்களுக்கு கடை ஒதுக்கப்பட்டதால இந்த முறை அது அடுத்தவங்களுக்குத்தான் போகணும். சரியா?’ என விதிகளை மீறாமல் அதை மக்களுக்கு புரியவைக்க பாட்டும் பாடினார் அமைச்சர். இதையடுத்து... அமைச்சரோடு ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டோம். அப்போது சில தமிழக நண்பர்களை எதிர்பாராமல் சந்தித்தோம். அமைச்சரை காக்க வைப்பதையும் மறந்து பத்து நிமிடங்களுக்கு மேல் அளவளாவி விட்டு திரும்பிப் பார்த்தால் அமைச்சரைக் காணோம். ‘கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டாரோ’ என பதைபதைத்தோம். ஆனால், அருகில் உள்ள பெட்டிக் கடையில் தமிழ் இதழ்களை வாங்கிப் படித்தபடி நம்மை நோக்கி வந்தவர்... ‘பேசிட்டீங்களா?’ என்றார் சிரித்தபடி. மக்களுக்கும் அமைச்சர்களுக்குமான நெருக்கத்துக்கு மலேசியாவில் இதுபோல் இன்னும் எக்கச்சக்க உதாரணங்கள்’’ என சிலிர்த்தார் கனகலட்சுமி.

என்ன? நம்முர் அமைச்சர்களை மலேசியாவுக்கு டியூஷன் அனுப்பலாமா?






ஆரா


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!