முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

டச் அப் பாய்




கண் திறந்தால் கதர்... கனவு காட்சியில் பிகர்..!
தேசப்பற்றில் அர்ஜுனை மிஞ்சுவார் போலிருக்கிறது சரத்குமார். இவரது அடுத்த படத்தை இயக்கப் போகிறவர் நடிகர் சங்க இணைச்செயலாளர் செல்வராஜ். இப்படத்தில் சரத்குமாருக்கு என்ன பெயர் தெரியுமா? சுதந்திரம்! கேட்பதற்கு ஓல்டு ஸ்டைலில் இருந்தாலும் ‘நவீன நமீதா’ ஸ்ருதியும், நகைச்சுவை இளவரசி சினேகாவும் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம். கண் திறந்தால் கதர். கனவு காட்சியில் பிகர். ஆஹா..!

சீறிய சிலந்தி நாயகி!
தி‘பாம்பு வளர்ப்புக்கு பத்து வழிகள்’ என்று புத்தகமே போடுவார் போலிருக்கிறது மோனிகா. ‘நஞ்சுபுரம்’ படத்தில் நடிக்கும் போதுதான் இவருக்கும் திருவாளர் நாகராஜாவுக்கும் பழக்கம். முதலில் தொட்டு, விளையாடி, அச்சத்தை போக்கி நடிப்பதற்கே ஒரு வாரம் ஆகிவிட்டதாம் இவருக்கு. ‘‘பெட் அனிமல் மாதிரி வீட்லேயே வளர்க்கலாம்’’ என்றெல்லாம் டிப்ஸ் கொடுக்குது பொண்ணு. ‘சிலந்தி’ படத்திற்கு பிறகு கவர்ச்சி மோனிகாவாயிட்டீங்களே என்றால், உர்ரென்று சீறினார் நாகம் போலவே. ‘‘யாரு சொன்னா அப்படி. இந்த படத்தில நான் குளிக்கிற காட்சி ஒன்று. அது கதையில் வர்ற முக்கிய காட்சி. அதுக்காக புடவைய கட்டிக்கிட்டா குளிக்க முடியும்?’’ என்றார். கேட்டுக்கங்க... கதையில இருந்தா குளிப்பாராம்!

அமீரின் ‘ஆதிபகவன்’!

தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் தயாரிக்கும் ‘ஆதிபகவன்’ படத்தின் இயக்குனர் நம்ம ‘யோகி’ அமீரேதான். ‘‘முதல் தடவ பார்க்கும் போதே அவரு நல்ல சினிமா ரசிகர்ங்கறது புரிஞ்சு போச்சு. இரண்டாவது சந்திப்பிலேயே அட்வான்ஸ் கொடுத்திட்டார். வழக்கம்போல இல்லாம சீக்கிரம் படத்தை முடிச்சு கொடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்’’ என்றார் அமீர். நாலு மொழிகளில் நடித்தாலும், ‘நாட் இன் யூஸ்’ லெவலில்தான் இருக்கிறது ப்ரியாமணியின் மார்க்கெட். இந்த படத்தின் மூலம் அதையும் சரி செய்யப் போகிறார் அமீர். மெய்யாலுமே மக்களே, இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி ப்ரியாமணிதானாம்!

ஷால்ராவுக்கே கால்ரா..!

காசு விஷயத்தில் கறார்! ரஹ்மானிடமிருந்து பிரிய இந்த ஒரு காரணம் போதாதா? பழைய ஆர்மோனிய பொட்டியே போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் கௌதம். சொல்லாமல் கொள்ளாமல் ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டுடியோவுக்கே போய் நட்பை புதுப்பித்துக் கொண்டாராம். ஜால்ராவுக்கே கால்ரா வர்ற அளவுக்கு இந்த புதுப்பித்தலை போற்ற ஆரம்பித்திருக்கிறார்கள் இரு தரப்பு உதவியாளர்களும்.


பிசினஸ் வுமன் த்ரிஜா!

‘‘நல்லா நடிச்சிருக்கேன். ஒரு தடவ படத்தை பாருங்களேன்’’ என்று முதலில் அழைத்ததே த்ரிஷாதானாம். அதன் பின்தான் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தையே பார்த்தாராம் உதயநிதி ஸ்டாலின். படமும் பிடித்து போய்விட மொத்தமாக விலை பேசி வாங்கிவிட்டார். கால்ஷீட் கொடுத்தோமா, கைநிறைய பார்த்தோமா என்று போய்விடுகிற நடிகைகள் மத்தியில் வியாபாரம் வரைக்கும் பங்கு கொண்ட த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்தாராம் கௌதம் வாசுதேவ மேனன்.






Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!