முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

டு சி..? யோசி!






கோழின்னு நினைச்சு கூடையை எடுத்துட்டு போனா, ஒட்டகமா உருமாறி, கூடாரம் கொள்ளாம நின்னா எப்படி-யிருக்கும்? அசினோட சம்பளம்-தான் இப்படி ஒட்டக சைஸுக்கு உசரமாயிருச்சாம்! விஜயின் ஐம்பத்தோராவது படத்தைத் தயாரிப்பது ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்தான் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. விஜய்க்கு ஜோடி சேர்வதற்காக அசினிடம் கேட்டார்களாம். அவரோ இரண்டு சி சம்பளம் கேட்டாராம்! டூ சி யா? யோசின்னுசொல்லிட்டு திரும்பிட்டதா தகவல்!

லைட் ஹவுஸ் மாதிரி பிரகாசம்!
‘சுர்லா’ என்று படத்திற்கு பேர் வச்சிட்டு, சுர்ருன்னு ஒரு ஃபிகரை காட்டலைன்னா, தமிழ்ச் சமூகம் கோவிக்குமே? மும்பையிலிருந்து நிகிதா ராவெல் என்ற நடிகையை இறக்குமதி பண்ணியிருக்கிறார் இயக்குனர் சஞ்சய் ராம். இப்படத்தின் தயாரிப்-பாளர் அழகன் தமிழ்மணியின் மகன் அஜய் கிருஷ்ணாதான் ஹீரோ. ஆறடி உயரத்தில் ஆஜானு-பாகுவாக இருக்கும் இவரைப் பார்த்து ‘நீ வந்தா முன்னணி ஹீரோக்களே உனக்குப் பின்னால மறைஞ்- சி ருவாங்க’ என்றார் அறிமுக விழாவில் ராதாரவி. ஒத்த பாட்டு, அதுவும் குத்துப் பாட்டு. அஜய் கிருஷ்ணா உசரத்துக்கே ஆள் பிடிக்கிறேன்னு தேடி மும்பைக்குப் போனாராம் சஞ்சய் ராம். நிகிதா ராவெலை நேரில் பார்த்தா, லைட் ஹவுஸ் மாதிரி அப்படி ஒரு பிரகாசம்!

அரசியல்பற்று இரண்டாம்பட்சம்தான்!
தான் ஹீரோவாக நடித்து, தயாரிக்கிற படத்தின் சேட்டிலைட் உரிமைக்காக, முன்னணி சேனல்களின் கதவைத் தட்டினாராம் அந்தப் பாடலாசிரியர். கட்டுப்படியாகிற விலையை சொல்வார் என்று எதிர்பார்த்தால், ‘ஒரு கோடியே முப்பது லட்ச ரூபாய் கொடுங்க’ என்றாராம். வியாபார விஷயத்தில் அரசியல் பற்று இரண்டாம் பட்சம்தான் என்று முடிவெடுத்தவர், மற்ற தொலைக்காட்சி நிலையத்தை அணுகியது போலவே, இலைக் காட்சி நிலையத்தையும் அணுகினாராம். படத்தோட மொத்த பட்ஜெட்டையும் ஒரே ஏரியா-விலே புரட்டிடலாம்னு துடிக்-கிற அவரோட ஆர்வத்தை ‘ஒவ்வொரு பூக்களுமே’ அதிர்ச்சியோடு பார்க்கிறது கோடம்பாக்கத்தில்!

இருக்கா? இல்லையா?
பெரியாரிஸ்ட் வேலுபிரபாகரன், செக்ஸாலஜிஸ்ட் ஆகிவிட்டாரோ என்னவோ... தமிழ் சினிமா வரலாற்றி-லேயே இல்லாத அளவுக்கு ஒரு நடிகையை ‘டாப்லெஸ்’ ஆக நடிக்க வைத்-திருக்கிறார் தனது ‘காதல் கதை’ படத்தில்! இந்த டாப்லெஸ் காட்சிகளை நறுக்க வேண்டும் என்று கத்திரியைத் தூக்கிக் கொண்டு நின்றது சென்சார். மூன்று வருடங்-களாகப் போராடி, ஒரு-வழியாகத் தணிக்கை சான்றிதழ் வாங்கி-விட்டார் வேலு பிரபாகரன். அடுத்த வாரம் படம் ரிலீஸ். ‘அந்தக் காட்சி படத்திலே இருக்கா, இல்லையா? அதைச் சொல்-லுங்க முதல்ல’ என்று தமிழகம் முழு-வதிலும் இருந்து போன் வருகிறதாம் அவருக்கு. இலை மறைவு காய் மறை-வாக அவர்-களுக்குப் பதில் சொல்கி-றாராம் வேலு பிரபாகரன். பதிலை மறைவா சொன்னா-லும், படத்தைத் தெளிவா காட்டு-வாருன்னு நம்பி கெடக்குது சனம்!






*





புகழேந்தி தங்கராஜ்



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!