முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document


சிரிக்க வைத்த தமிழகத் தமிழன்!

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சி பட்டி.

திருமதி சீனியர் கேள்வி கேட்டாலும் சீனியர் டக் என்று பதில் சொல்லி விடுவாரா?

சொல்லிவிடுவார். என்ன பத்திரிகை-யிலே பலசமயம் ‘ஷொட்டு’. அங்கே ‘குட்டு’ -சம்சாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

செ.இராமநாதன், திண்டுக்கல்.

நமது மீனவர்களின் தலையெழுத்து அடிவாங்குவதுதானா? துன்பங்கள் தொடர்கதைதானா?

நமக்கென்று வாய்த்த அண்டை நாடு அப்படி. அவர்களின் கடல் எல்லையைத் தாண்டிப் போவது தவறு என்றாலும் இந்த அத்துமீறல்களுக்கு இலங்கை கொடுக்கும் தண்டனை மனிதாபிமானமற்ற செயல். இனியாவது துன்பங்கள் குறையும் என்று எதிர்பார்ப்போம். சமீபத்தில் தாக்குதல்கள் அதிகரித்தது, நம்மை கச்சத்தீவு பக்கம் வரவிடாமல் தடுக்கத்தான். வாழ்க இலங்கை - சீன உறவு!

துரை.ராமகிருஷ்ணன், எரகுடி.

உலகக்கோப்பை 20:20 போட்டிகளில் இந்திய அணி அரையிறுதிக்குக்கூட தகுதி பெறாமல் போனதற்கு என்ன காரணம்?

ஐ.பி.எல்.லில் காசுக்காடிய களைப்பும், கொழுப்பும்.

கே.தெய்வசிகாமணி, சென்னை.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் அரசுப் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளாரே? இது சரிதானா?

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை பாதிக்காத தொழில்களைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் தவறில்லை.

அ.அப்துல் காதர், சென்னை - 45.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கார் தங்கு தடையின்றி செல்ல வசதியாக போக்குவரத்தை நிறுத்திய போலீஸாரின் செயலை அவரே கண்டித்துள்ளாரே?

வரவேற்கலாம். அஞ்சாநெஞ்சத்தினுள் அன்புக்கும் அரவணைப்புக்கும் அறை உண்டு என்பதற்கு இன்னொரு உதாரணம்.

எஸ்.சேகர், சென்னை.

கவிஞர் கனிமொழி - அரசியல்வாதி கனிமொழி. ஒப்பிடுங்கள் சீனியர்?

முதல் கனி - கலைஞரின் கனி இரண்டாம் கனி - முதல்வரின் கனி

நா.புவனேஷ்வரி, முத்துப்பேட்டை.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எவ்வாறு தண்டிப்பது?

லஞ்சம் கொடுக்காமல்!

மு.கமால் பாட்சா, திருச்சி.

* தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை முன்பு மாடு மேய்க்கப் போகலாம் என்றார். இப்போது பூத் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்று கண்டுபிடித்தவனை செருப்பால் அடிக்கணும் என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?

மருத்துவருக்கு பக்தி அதிகம் போல. முதலில் நரேஷ் குப்தாவை கிருஷ்ணராகப் பாவித்தார். இப்போது கண்ணப்ப நாயனார் கால்வைத்த சிவனாக! என்னே அதீத பக்தி!

சிவசுப்பிரமணியன், கடலூர்.

இன்றைய சூழ்நிலையில் படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் போனது ஏன்?

ஆங்கிலேயர் விட்டுச் சென்ற கல்வி முறையை அவர்களே விட்டுவிட்டாலும் நாம் விடுவதாக இல்லையே - அதனால்தான்.

ஏ.கே.நாசர், டி.ஆர்.பட்டினம்.

தி.மு.க. ஆட்சியில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அம்சம் என்று எதைச் சொல்லலாம்?

கட்சிக் கட்டுப்பாடு. இரண்டாம் நிலைத் தலைவர்களின் வருத்தங்களும் கோபங்களும் பி.ஜே.பி. உள்பட மற்ற கட்சிகளின் கட்டுக்கோப்பை பாதித்த அளவுக்கு தி.மு.க.வைப் பாதித்ததில்லை. கலைஞரின் இந்த மாயாஜாலத்தைப் பாராட்டத்தான் வேண்டும். (இடையில் ஏற்பட்ட உடைப்புகூட ஒரு வகையில் ஒட்ட வைக்கப்பட்டுவிட்டதே!)

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என அரசு கேட்டுக் கொள்வது போன்ற நிலையை வேறு எங்காவது கண்டதுண்டா?

மற்ற மொழிகளுக்கும் இந்த நிலை இல்லா-மலில்லை. ‘அணூணிதணஞீ tடஞு தீணிணூடூஞீ’ என்ற ராஜ்கபூரின் இந்திப் படத்தின் பெயர், அந்தக் காலத்திலேயே சர்ச்சைக்-குள்ளானது என்று சொல்வார்கள்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

ஆன்மிகத்தின் எல்லை எது?

மூடநம்பிக்கைக்கு முன்னாலுள்ள கோடு. தாண்டாமலிருக்கும்வரை நன்மைகள் மட்டுமே விளையும்.

இரா.பக்தர் சாலமோன், அமைந்தகரை.

அ.தி.மு.க. தலைமை, அனுபவசாலிகளின் கருத்தைக் கேட்டு, தேர்தல் யுக்திகளை கடைப்பிடிப்பதாக இருந்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஹும்... நீங்களும் நானும் நினைத்து என்ன பயன்? விதி வலியது!

ப.காளிதாசன், நீர்விளங்குளம்.

வெற்றி பெற்ற காதல், தோல்வியுற்ற காதல். எதில் சுவாரஸ்யம் அதிகம்?

சுவாரஸ்யம் வெற்றி தோல்வியில் இல்லை. காதலித்த பெண்ணை மணப்பது வெற்றியா தோல்வியா என்பது உங்கள் மனப்போக்கைப் பொறுத்தது!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

அரசியலில் எதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும்?

வெட்டி பந்தாவை!

பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

துணை முதல்வர் பதவி ஏற்றதும் மு.க.ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் தன்னை நாத்திகவாதி என்று சொல்லிக் கொண்டதில்லை. தி.மு.க.விற்கும் நாத்திகத்திற்கும் இருந்த - இருப்பதாக வெளிப்படுத்தப்பட்ட உறவு, மூத்த தலைமுறையுடன் முடிகிறதென்றே நினைக்கிறேன்.

உமரி.பொ.கணேசன், மும்பை-37.

நம் நாட்டில் பணத்திற்காக மாணவர்களை கடத்துவது அதிகரித்து வருகிறதே! காரணம் என்ன?

நமது சமுதாயம் குற்றச்சந்தை-யாகவே மாறிவரும் அவல-நிலைதான்.

எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.

தமிழகத்தில் 35 லட்சத்துக்கு மேல் போலி குடும்ப அட்டை உருவாக அரசியல் கட்சிகள்தான் காரணமா?

போலி விண்ணப்பங்களைக் கொடுப்பதற்கு அரசியல்வாதிகள்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் அரசியல் பேராசைக்கு பொதுமக்கள் சிலரின் நப்பாசையும் துணை போகிறது.

ரா.சின்னத்தம்பி, துடியலூர்.

அனைத்திந்திய ஆரிய முன்னேற்றக்-கழகத்தை எஸ்.வி.சேகர் தொடங்குவது வரமா? சாபமா?

அவருக்கு வரமாக அமைய வாய்ப்புண்டு. இருந்தாலும் அவர் காமெடி கொஞ்சம் ஓவர்தான்.

ரா.சின்னத்தம்பி, துடியலூர்.

100 நாட்களில் மத்திய அமைச்சர்கள் துறை திறனாய்வு செய்யப்படுவது பயம் தருமா? பலன் தருமா?

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஓரளவு பலன் தரலாம். ஆனால் அதற்குப் பிறகு எல்லோரும் இந்த விஷயங்-களை மறந்து-விடுவார்கள். மக்கள் உள்பட!

என்.வடிவுக்கரசி, மேட்டூர்.

முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு, ஏழைக் குழந்தை-களுக்கு முடி வெட்டினார். குஜராத் முதல்வர் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தினார். இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது?

இரண்டுமே விளம்பரத்திற்-காகச் செய்யப்-பட்டதுதான். இருந்தாலும் அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டால் பாவம் என்ன செய்வார்-களோ என்ற உங்கள் கவலை இந்நேரம் தீர்ந்திருக்குமே!

ஆர்.ஜோதிலிங்கம், ஆற்காடு.

ஏழைகளுக்காகப் பாடுபடும் கம்யூனிஸ்ட் ஆளும் மேற்கு வங்க மாநிலத்திலா இப்படி? அப்படித்தான் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற சராசரி அரசியல் கட்சிகளை போலவே நடந்து கொள்கிறதா?

ஆம். அதுதான் கசப்பான உண்மை. ஒரிஜினல் கம்யூனிசத்திற்கும் இந்தியாவில் இருக்கும் கம்யூனிசத்திற்கும் வெகுதூர இடைவெளி. அந்த கம்யூனிசம் ‘கம்ரேடிசம்’. இது ‘கமிசனிசம்’.

கே.எஸ்.ஜேம்ஸ்ரவி, நெல்லை.

ஒரு நாட்டின் பட்ஜெட்; ஒரு வீட்டின் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய சூழ்நிலையில் இரண்டுமே ‘வரவு எட்டணா; செலவு பத்தணா’ வகையைச் சேர்ந்ததுதான். யதார்த்தமான பட்ஜெட் நாட்டுக்கும் வீட்டுக்கும் நீண்டகால பயனைத் தரும்.

ந.பழனிகுமார், ஆம்பூர்.

2011-ல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் என்கிறார் தங்கபாலு. எப்படி இவரால் அதுபோல பேச முடிகிறது?

அப்படிப் பேசாவிட்டால் பழனிகுமார்கூட அவரை மறந்துவிடுவாரே! முதலில் தமிழக காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பவனில் தனியாக ஆட்சி அமைக்கட்டும்.

வே.நந்தகுமார், திருப்பூர்.

சமீபத்தில் யாரை நினைத்து சிரித்தீர்கள்? யாரை நினைத்து அழுதீர்கள்?

தமிழகத் தமிழன் - ஈழத்தமிழர்!

வி.சிவகாமி, விருதுநகர்.

** விவசாய நிலங்கள் எல்லாம் வீடுகட்டும் நிலங்களாக மாறி வருகிறது. உணவுப் பொருள் உற்பத்தி குறையக் குறைய, நம் சந்ததிகள் என்ன செய்யப் போகிறார்கள்? யாரும் இதை நினைத்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே?

வேதனைப்பட வைக்கும் உண்மை. வேறு வழி-யில்லை-யென்றால், அரசாங்கமே நேரடியாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும். மற்ற தொழில்களைப் போல் விவசாயத்திலும் அரசு சார்ந்த பொது நிறுவனங்களை நிறுவி சமன்-படுத்தலாமே?

ப.ராமகிருஷ்ணன், காயக்காடு.

எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி அமைவதில்லையே ஏன்?

உருவம் ஒன்றுபோல் இருப்பவர்-களுக்குக்கூட உள்ளம் அப்படி-யில்லையே, அதனால்தான்!

** ரூ. 300 பரிசு பெறும் கேள்வி * ரூ. 200 பரிசு பெறும் கேள்வி


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!