அலெக்ஸ்-பாண்டியன்
அ.தி.மு.க.வில் தலைகீழ் மாற்றம்!

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு... ஒன்று மனசாட்சி... இன்னொன்று தெய்வத்தின் சாட்சியம்மா” என்று பாடியபடி அலெக்ஸ் அறைக்குள் நுழைந்தார் பாண்டியன்.
“எதுக்கு இந்தப்பாட்டு. நான் ஏதாவது தப்பா நடந்துக்கிட்டேனா?”
“அட நீங்க வேற. ஓ.பன்னீர்செல்வத்தோட மனசாட்சி இந்தப் பாட்டைத்தான் பாடிக்கிட்டு இருக்குதாம். அவர்தான் இந்த வாரம் பத்திரிகை கதாநாயகனா இருப்பாருன்னு அ.தி.மு.க.வுல பேசிக்கிறாங்க”
“அவருக்கு ஏதாவது பெரிய பதவி கிடைக்கப் போவுதா. இல்ல கட்சி மாறப் போறாரா?”
“இருக்கற பதவிய பறிக்காம இருந்தா போதும்னு மனுஷன் அல்லாடிக்-கிடக்காரு. நீங்க என்னடான்னா, வேற பதவி கிடைக்கப் போவுதா. இல்ல, கட்சி மாறப் போறாரான்னு டென்ஷனை கிளப்பறீங்களே? அ.தி.மு.க.வுல அதிக பதைபதைப்பில் இருப்பது ஓ.பி.எஸ்.தான். தலைக்கு மேல அவருக்குக் கத்தி தொங்கிக்கிட்டு இருக்குதுங்க”
“அட, விஷயம் என்னன்னு சொல்லாம இழுக்கறீங்களே?”
“அவருடைய பொருளாளர் பதவிக்கு ஆபத்து வந்துவிட்டது. அவரிடம் இருக்கும் அந்தப் பதவி, அநேகமாக செங்கோட்டையன், பொன்னையன், தம்பிதுரை ஆகிய மூவரில் ஒரு-வருக்குக் கிடைக்கலாம். சட்ட- மன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறார் ஓ.பி.எஸ். அந்தப் பதவியை யாருக்குத் தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை”
“ஏன் இந்தப் பதவி பறிப்பு?”
“எல்லாம் தோல்வி மயம்தான். திருமங்கலம் இடைத்தேர்தல் பொறுப்பு ஓ.பி.எஸ்.ஸுக்குத்தான் வழங்கப்பட்டது. அதில் தோல்வி. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்-பான்மை-யான இடத்தில் தோல்வி. ஆனால், தேனி அ.தி.மு.க. கோட்டை. அதில் எப்படித் தோற்றோம்? என்பதுதான் அம்மாவுக்குக் கோபமாம். தங்க தமிழ்ச்செல்வனை அறிவித்ததுமே ஓ.பி.எஸ். நான்கு நாட்கள் தொகுதியில் விசாரித்துவிட்டு, வேட்பாளரை மாற்ற-வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்-கிறார். தனது முடிவை மாற்றிக் கொள்ள-வில்லை ஜெயலலிதா. அப்படி கோரிக்கை வைத்ததற்குக் கடும் டோஸ் விழுந்திருக்கிறது. அதே நேரத்தில் தேனி தேர்தல் செலவுக்குத் தலைமை பணத்தையும் கூடுதலாக அனுப்பி வைத்ததாகத் தகவல். இவ்வளவு செய்தும், தேனியில் வெற்றிபெற வைக்க முடியவில்லையே என்பதால்தான் மாற்றம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க.வில் ஒரு தரப்பு.”
“இன்னொரு தரப்பு என்ன சொல்கிறது?”
“திருமங்கலம் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ்ஸையும் ஒரு பொறுப்பாளராக நியமித்தது உண்மைதான். ஆனால், நிஜத்தில் பணப்பட்டுவாடா முதல் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்துவது வரை அத்தனையும் தங்கள் வசம் வைத்திருந்தவர்கள் சசிகலாவின் உறவினர்கள் ஆறு பேர்தான். கட்சிக்கு எந்தச் சம்பந்தமுமே இல்லாத அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்ததுதான் தோல்விக்கு உண்மையான காரணம். இதில் ஓ.பி.எஸ்ஸை குறை சொல்வது என்ன நியாயம்? என்கிறது இன்னொரு தரப்பு.”
“தேனி விவகாரம்?”
“இந்த விஷயத்தில் ஓ.பி.எஸ். மட்டுமல்ல... தேனி தொகுதியில் இருந்த ஒவ்வொரு அ.தி.மு.க. காரனுக்கும் தெரியும், தங்க தமிழ்ச்செல்வனைப் போட்டால் ஜெயிக்க முடியாது என்பது. இதைத்தான் கட்சித் தலைமையின் கவனத்துக்கு உரிய நேரத்தில் கொண்டு போனார் ஓ.பி.எஸ். அதற்கு எந்தப் பதிலும் இல்லை. எதிர்பார்த்த படியே தேனியில் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. இதற்கு ஓ.பி.எஸ். என்ன செய்வார்? என்பது அவர்கள் வாதம்.”
“அவ்வளவுதானா?”
ஓ.பி.எஸ்.ஸை டம்மியாக்க திருமங்கலம், தேனி என்று சாக்குச் சொல்வது எல்லாம் ஒரு பேச்சுக்குத்தான். உண்மையில், தனக்கு மாற்றாக ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க ஜெயலலிதா முடிவெடுத்த போதே சசிகலா வகையறாக்களுக்கு அவர் எதிரியாகிப் போனார். அப்போதிருந்தே ஜெயலிதாவிடம் அவருக்குள்ள செல்வாக்கைக் குறைக்க என்னென்னவோ வேலைகள் செய்தார்கள் மன்னார்குடி வகையறாக்கள் சிலர். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் எண்ணம் ஈடேறியிருக்கிறது என்கிறது அந்த இன்னொரு தரப்பு”
“ஓஹோ ஓ.பி.எஸ்ஸிடமிருந்து மட்டும்தான் பதவி பறிப்பா?”
“இல்லை. அ.தி.மு.க.வில் தலைகீழ் மாற்றம் வரும் என்கிறார்கள். அவைத்தலைவர் மதுசூதனன், தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்பட மாநில நிர்வாகிகள் மற்றும் பன்னிரண்டு மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிக்கப்படலாம். சிலர் பதவி மாற்றத்துடன் தப்பலாமாம். ஒரு பெரிய பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு கடைசிக்கட்ட ஆலோசனையில் இருக்கிறார் ஜெயலலிதா என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.”
“அப்படியென்றால், கொடநாடு குளிர்ச்சியாக இல்லையா. கொதிக்கும் நாடாகிவிட்டதா?”
“அப்படிச் சொல்லமுடியாது. சமீபத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தனது மகளின் திருமண பத்திரிகையை கொடுப்பதற்கு குடும்பத்தோட போயிருக்காரு. நல்ல வரவேற்பாம். ‘கண்டிப்பா பொள்ளாச்சிக்கு வருவேன்’னு சொல்லி இருக்காங்களாம். கொடநாட்டுல இருந்து ஹெலிகாப்டர்ல பொள்ளாச்சியாம். திருமணம் முடிஞ்சதும் அதே ஹெலி-காப்டர்ல கொடநாட்டுக்குப் பயணமாம்”
“அப்போ சென்னைக்கு எப்பத்தான் வரப்போறாங்களாம்?”
“சட்டமன்றம் முடியறதுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி சென்னை வருவாங்க-போல. சட்டமன்றத்தில் கையெழுத்துப் போடனுமே. அதுக்காகத்தான். ஜூலை 20-ம் தேதி எதிர்பார்க்கலாம்”
“தி.மு.க.வுல ஒரு பஞ்சாயத்து. அதுவும் சூப்பர் காமெடியா பஞ்சாயத்து நடத்தினாராம் கலைஞர்” என்று அலெக்ஸ் தி.மு.க. விவகாரத்துக்குத் தாவினார்.
“கலைஞரின் காமெடியை ரசிச்சி ரொம்ப நாளாச்சு. சொல்லுங்க”
“தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரைக்கும் மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்கும் நடந்த தகராறு சம்பந்தமா கடந்தவாரம் பஞ்சாயத்தாம். இரண்டு பேரும் வந்திருந்தாங்களாம் அறிவாலயத்துக்கு. முதல்ல பெரியசாமி முறை. அடுத்து வந்திருக்காரு ஜெயதுரை. ‘வாய்யா வீரிய டாக்டரு. எலெக்ஷன் நடந்து எவ்ளோ நாளாச்சு?’ன்னு தலைவர் கேட்க, ‘ஐயா ஒரு மாசமாச்சு’ன்னு சொல்லியிருக்காரு ஜெயதுரை. ‘இப்பவே இப்படி மாறிட்ட. கொஞ்ச நாளாச்சுன்னா, அந்தப் பொம்பளை பக்கம் ஓடிப்போயிடுவ போலிருக்கே’ என்றாராம் தலைவர்.
“ஐயா, அது வந்து...’ன்னு இழுத்திருக்-காரு ஜெயதுரை.‘இருய்யா. தூத்துக்குடியில தி.மு.க. ஜெயிக்காதுன்னுதான் எழுதி வைச்சிருந்-தோம். உன்னை ஜெயிக்க வைச்சது பெரியசாமிதான். அதுவும் உன்னை-யெல்லாம் எழுபத்தைந்தாயிரம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிக்க வைச்ச பெரியசாமிக்கு நீ எப்படி விசுவாசமா இருந்திருக்கனும். இப்பவே அவருகிட்ட கணக்கு வழக்கை கேக்கற. நீயும் பெரிய தொகை செலவு செஞ்சிருக்கே. கட்சியும் அங்க பணத்தை வாரி இறைச்சிருக்கே’ என்றாராம் கலைஞர். ‘ஐயா, அவரு என்னை வெட்டுறதுக்கு அரிவாளையே தூக்கிட்டாரு’னு சொன்னாராம் ஜெயதுரை”.
“இதைக் கேட்டதும் கலைஞர் சிரிக்க ஆரம்பிச்சாராம். ‘அதுதான் உங்க ஊரு. அதுக்கு நீ ஏன் பயப்படற. இரண்டு பேரும் சேர்ந்துபோய் நன்றி அறிவிப்புக் கூட்டம் போடுங்க. அதுதான் உனக்கு நல்லது. அவரு சொல்ற மாதிரி நடந்துக்க’ன்னு சொல்லி அனுப்பினாராம் கலைஞர்”
“எல்லாம் சரி. பெரியசாமிக்கிட்ட ஜெயதுரை ஏன் கணக்குக் கேட்டாருன்னு சொல்லவேயில்லையே?”
“தேர்தல் நேரத்துல பெரிய தொகையை, பெரியசாமிக்கிட்டே கொடுத்திருக்காரு. சில ஊர்ல பணமே போய் சேரலைன்னு தகவல் வந்திருக்கு. தேர்தல் முடியறவரைக்கும் பொறுமையா இருந்த ஜெயதுரை, மெதுவா பெரியசாமிக்-கிட்டே கணக்குக் கேட்டிருக்காரு. ‘டேய். எம்.பி.யானதும் திமிரா? ஒழுங்கு மரியாதையா இரு’ன்னு சொல்லி-யிருக்காரு பெரியசாமி. ‘அப்போ, என் பணத்தை அமுக்கிட்டீங்க. அதுக்குப் பதிலா, மந்திரி பதவி வாங்கித்தாங்க’ன்னு எகிற ஆரம்பிச்சிருக்கார் ஜெயதுரை. இதற்கு பதிலாக பெரியசாமி தனது கோபத்தைக் கொஞ்சம் காட்ட... ஜெயதுரை அந்த இடத்திலிருந்து காணாமப் போயிட்டாராம். இதுதான் நடந்தது”
“வேற ஏதாச்சும் இருக்கா தி.மு.க. தரப்புல?”
“முக்கியமான நகரத்தோட மேயர் பதவி மாறப்போகுதா அல்லது பறிக்கப் போறாங்களான்னு தெரியலை. அந்த மேயரே அப்படிச் சொல்லிக்கிட்டு இருக்காராம். ‘எனக்கு உடம்பு சரியில்லை. அதனால மேயர் பதவியில இருந்து விலகிடறேன்’னு சொல்றாங்களாம். விசாரிச்சா வேறா மாதிரி சொல்றாங்க. அதிகமா சம்பாதிச்சதை மேலிடம் ஸ்மெல் பண்ணிடுச்சாம். அதுலதான் பதவிய பறிக்கப் போறாங்களாம்” என்று அலெக்ஸ் சொல்லி முடிக்கவும், அர்ச்சனா இன்டர்காமில் பேசினார்.
“சார், உங்களோட ரிலேடிவ் மீனாட்சி பேசறாங்க”
“அப்புறமாப் பேசச் சொல்லும்மா” என்று அலுத்துக் கொண்டார் அலெக்ஸ்.
“பத்து நிமிஷத்துல ஐந்து கொலை செய்தியை டி.வி.யில பார்த்ததுமே, எனக்கு உடம்பே சிலிர்த்துப் போச்சு” என்றார் பாண்டியன்.
“உண்மையில அந்த ஆளு சைக்கோவா?”
“கிடையாது. அந்த ஆளுக்குச் சொந்த ஊரு புதுக்கோட்டை அருகேயுள்ள பொன்னமராவதியை அடுத்த மேலச்சிவபுரி. மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் தொழிலை செஞ்சிக்கிட்டு இருந்தானாம். அப்போ, போதை ஊசி பழக்கம் ஏற்பட்டிருக்கு. அதிலிருந்து, ஒரு மாதிரியா ஊர்ல திரிஞ்சிக்கிட்டு, வர்றவங்க போறவங்கக்கிட்ட காசு கேட்கிறதுதான் வேலை. சில நேரம் போதை ஊசிக்குக் காசு கிடைக்கலைன்னா, கஞ்சா அடிப்பானாம். ஒரு வாரத்துக்கு முன்னாடி, அரிவாளை எடுத்து எல்லாரையும் விரட்ட ஆரம்பிச்-சிருக்கான். மறுநாள் இந்தச் சம்பவம். பத்து நிமிஷத்துல அஞ்சு பேரை உருட்டுக் கட்டையால மண்டையில அடிச்சி கொன்னுருக்கான். இவனுக்குக் கடுமை-யான தண்டனை தரணும். சைக்கோன்னு சொல்லி விடுதலை செஞ்சா, நாட்டுல ஏகப்பட்ட பேரு சைக்கோவா மாறிடுவானுங்க. இதைவிட திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை கேசுதான் இன்னும் மர்மமாவே இருக்குதுங்க”
“அதுல ஏதாவது சதி இருக்குதா?”
“ஆமாம். திண்டுக்கலில் ரொம்ப ஃபேமஸ் டாக்டர் பாஸ்கரன். அவரை ஏப்ரல் 30-ம் தேதி கடத்தினாங்க. மே 8-ம் தேதி அவரோட உடல் ஆழியாறு ஆத்துப்பகுதியில கிடந்தது. முதலில் அவரை கடத்திய கும்பல், அஞ்சு கோடி ரூபாய் கேட்டிருக்காங்க. அந்தப் பணத்தை வாங்க, மூணு நாள் ஏகப்பட்ட இடத்துக்கு வரச்சொல்லிக்கிட்டே இருந்தாங்க. போலீஸ்காரங்க எதையும் சரியாக் கண்டுபிடிக்காம, பணம் எடுத்துக்கிட்டு போன, டாக்டரோட மனைவியை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதனால, கடத்தல்காரங்க பணத்தை வாங்கவேயில்லை. கடைசியில டாக்டர் பிணத்தைத்தான் போலீஸால மீட்க முடிஞ்சுது”
“ஏதோ சதின்னு சொன்னீங்களே?”
“வங்கியில அவர் பெயரில் ஏகப்பட்ட கோடிகள் டெபாசிட் இருக்காம். சமீபத்தில் சிகரெட் ஏஜென்சியை கடும் போட்டிக்கிடையில் ஏலத்தில் எடுத்திருந்தார். பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். ஊரிலேயே நம்பர் ஒன் டாக்டர். ஏகப்பட்ட சொத்துக்கள். அவர் கடத்தப்படுவதற்கு முன்பாக, தேர்தல் செலவுக்காக பல கோடி ரூபாயை சிலர் டாக்டரிடம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. யாருக்குமே அவர் பணத்தைத் தரவில்லையாம். அதில் ஆத்திரப்பட்ட அரசியல் கோஷ்டிகள், இதுபோன்று செயல்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இத்தனை நாளாக இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையையும் போலீஸார் எடுக்காமல், நாட்களை கடத்தவே மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி களத்தில் இறங்கியதும், வழக்கு சி.பி.சி.-ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்-படுகிறது. அதுவரை எந்தத் தடயமும் சிக்கவில்லை. வழக்கு மாற்றப்பட்ட மறுநாளே, டாக்டரை கடத்திய டாட்டா சுமோ கார் கிடைக்கிறது. அதில் மூன்று மொபைல்போன்கள் கிடைக்-கின்றன. இக்கொலையின் பின்னணியில் பெரும் சதியும் மர்மமும் அடங்கி இருப்பதாகவே உள்ளூர் மக்கள் பேசிக் கொள்கின்றனர்”.
“கடைசியா ஒரு தகவலை சொல்றேன். விடுதலைப் புலிகளின் நவீன ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் ராமேஸ்-வரம், தனுஷ்கோடி, கோடியக்கரை பகுதிகள் வழியாக விற்பனைக்கு வரலாம் . அதைச் சமூக விரோதிகள் வாங்கினால், அமைதி-யான தமிழ்நாட்டில் பலர் அல்லலுக்கு ஆளாக நேரிடும் என்று நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரத்தில் பேசப்-படுகிறது. இந்தக் கள்ளத்-தனமான ஆயுத விற்பனையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நல்ல அதிகாரிகள் எதிர்பார்க்-கிறார்கள்” என்று முடித்தார் அலெக்ஸ். ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு நடை-யைக் கட்டினார் பாண்டியன்.
*
‘