முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!





‘காற்று, தண்ணீர், துணிமணி எல்லாமே காரமா இருக்கு!’ என்ற தலைப்பில் 18.6.2009 தேதியிட்ட நமது ‘தமிழக அரசியல்’ இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் விருதுநகரை மையமாகக்கொண்டு செயல்படும் ‘சில்லிஸ் எக்ஸ்போர்ட் ஹவுஸ்’ என்ற தனியார் நிறுவனம், 24 மணி நேரமும் மிளகாயை அரைத்து எண்ணெய் எடுத்துக்கொண்டு வருகிறது. அரைக்கும்போது கழிவான மிளகாய்த்தூளை காற்றில் கலந்து விடுகின்றனர். அதோடு கழிவுநீரை நிலத்தில் விடுகின்றனர். அதனால் நிலத்தடி நீரில், வத்தல் கழிவு நீர் கலந்து காரமாகவும், ரத்த கலரில் சிவப்பாகவும் வருகிறது. இந்த கம்பெனியைச் சுற்றி இருபத்தைந்தாயிரம் குடும்பங்கள் இருக்கு. எங்க வீட்டிலுள்ள ஆழ்குழாய் குடிநீரைக்கூட குடிக்கவும், குளிக்கவும், துணிகூட அலசவும் முடியவில்லை என்று விருதுநகர் வாசிகளின் புலம்பலை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்தச் செய்தியைக் கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுஜி தாமஸ் வைத்தியர் நம்மை தொடர்பு கொண்டு, “அப்பகுதியில் நிலத்தடி நீரையும், காற்றையும் ஆய்வுக்கு அனுப்பியதில் காரத்தன்மை கலந்துதான் வருகிறது எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சில்லிஸ் எக்ஸ்போர்ட் ஹவுஸ் நிறுவனத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக பதினைந்து தினத்திற்குள் கழிவுகளை நிறுத்தவில்லை என்றால் மக்கள் நலன் கருதி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இதையும் மீறி இந்த நிறுவனம் தொடர்ந்து அசுத்தங்களை வெளியேற்றினால், பதினாறாவது நாள் கம்பெனி சீல் வைக்கப்படும்” என்று சொன்னார்.

ஆனால், இந்த நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை கண்டு கொள்ளாத-வாறு தொடர்ந்து கழிவுகளை வெளியேற்றிக்கொண்டு-தான் உள்ளது. பதினாறாவது நாள் அதிகாரிகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

*





ஜி குமரகுரு



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!