முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document


காணாமல் போகும் வைகை!
-ஆறு இருந்தற்கான அறிகுறியே இல்லாத அவலம்



உலகு புரந்தூட்டும் உயிர்ப் பேரொழுக்கத்துப்

புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி

வையை என்ற பொய்யாக் குலக்கொடி”

- பாண்டிய நாட்டிற்கு உயிர்நாடியாக விளங்கிய வைகை ஆற்றை இப்படிப் புகழ்கிறது சிலப்பதிகாரம். மேற்குத் தொடர்ச்சி மலையின் வருஷநாடு மலைப் பகுதியில் தொடங்கி தேனி, அல்லி நகரம், பெரியகுளம், சோழவந்தான் வழியாக மதுரைக்கு வந்தது மாசுபடுத்துவதற்காகவா? ரத்தக் கண்ணீர் விடுவதற்காகவா? என்ற கேள்விகளோடு தொக்கி நிற்கிறது வைகை ஆறு.

மதுரையில் நெசவுத் தொழில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் சுங்கிடிச் சேலைகளுக்குத் தனி மரியாதை. அதற்கான மூலப் பொருட்களுக்காக செல்லூர் பகுதியில் உருவாக்கப்-பட்ட சாயப்பட்டறைகளின் கழிவுகள், நேரடியாக வைகை ஆற்றில் கலந்து மாசுபடுத்தியது. அதுபோல, வைகையில் கலக்கும் கிருதுமால் நதியை வாகன கட்டுமான நிறுவனங்களும், பணி-மனை-களும் அது தொடர்பான தொழில்-களும் பெரிதும் நாசப்படுத்தியுள்ளது.

ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், பழங்காநத்தம், தெற்குவாசல், அனுப்பானடி வழியாகச் செல்லும் கிருதுமால் நதி, தமிழக நதிகளின் பட்டியலில் முக்கிய இடம் பெற்றது. இது புண்ணிய பூமியும் கூட. காசியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை வருபவர்கள், ராமேஸ்வரம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ‘இந்த நதியில் குளித்தாலே போதும் புண்ணியம் கிடைத்தது மாதிரி’ என்பார்கள்.

“இன்று கிருதுமால் நதியைப் பார்த்தால் கற்பனையில் கூட நீராட முடியாது. இந்த நதியை மாசுபடுத்தியதில் மதுரையின் மிகப் பிரபலமான நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. வைகையை மாசுப்படுத்துவதில் 95 சதவிகிதம் பங்கு சாக்கடைகளுக்குத்தான். சாக்கடை கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்காமல் தடுத்தால்தான் வைகையைக் காப்பாற்ற முடியும். மறைந்த முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்-ராஜன் இருக்கும்போது வைகையின் இருபுறமும் கரைப்பகுதி மேல் சாலைப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

மதுரையில் இருக்கும் 11 கால்வாய்களைக் கட்டி, கவரிங் சிலாப் போட 350 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டியது மதுரை மாநகராட்சி. இதற்கான டெண்டர் விடப்பட்டு அந்த வேலை அப்படியே கிடப்பில் கிடக்கிறது. மதுரையில் சாக்கடை நீர் வரத்தை ஒழுங்குபடுத்தி, கொசுத் தொல்லையை ஒழிக்க வேண்டுமானால் இந்தத் திட்டம் வந்தால்தான் சரியாக இருக்கும்” என்று பழைய வரலாற்று ஆதாரத்தைப் புரட்டிப் போட்டார் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் முருகன்.

“அந்தக் காலத்துல வைகை ஆற்றின் கரையின் இரு புறமும் தண்ணீர் புரண்டு ஓடும். அப்ப நாங்க கரை ஓரமா துணிகளை துவைப்போம். ஆனா, இப்போ என்ன நிலைமை? எப்பவோ ஆத்துல வந்த தண்ணீரை வைத்துதான் எங்க பிழைப்பு ஓடுது. அந்தத் தண்ணீரும் மாசுபட்டு இருக்கு. மழை நேரங்-களில் சாக்கடைத் தண்ணீருடன் சேர்ந்து வேற வேற இடங்களில் இருந்து வந்து கலக்கும் கெட்ட நீரால், எங்க கை, கால் எல்லாம் புண்ணாகிப் போகுது. அதனால்தான், நாங்க சாக்குப் பை இல்லாட்டி பிளாஸ்டிக் பையை கால்ல கையில கட்டிக்கிட்டு வேலை செய்யுறோம்.

சித்திரை திருவிழாவை நாங்க ஆத்துல உட்கார்ந்துதான் பார்ப்போம். இப்போ அழகரே, விட்டா போதுமடா சாமின்னு ஆத்து ஓரமா வந்துட்டு அப்படியே ஓடி விடுகிறார்” என்று சொல்லி வேதனைப்பட்டார் சலவைத் தொழிலாளி முத்துலட்சுமி.

“வைகைக் கரையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு வீடுகளும் தொழில்பேட்டைகளும் அமைக்கப்-பட்டிருக்கிறது. இந்தக் கழிவுகள் அனைத்தும் வைகை ஆற்றில்தான் கலக்கிறது. மதுரை, மக்கள்தொகை பெருகிவிட்ட நகரம். இறைச்சிக் கடைகளின் கழிவுகளை தாங்குவதும் வைகை ஆறுதான். ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி புதைகுழியாக இருப்பதால், நிறைய கொலைகளும் இங்கே நடக்கிறது. கோச்சடையில் இருந்து விரகனூர் முடிய வைகை ஆறு என்ற சுவடே இல்லை.

மாட்டு வண்டியில் மணல் திருடு போகிறது. ஒரு வண்டி மணல் முந்நூறு, நானூறு என விற்பனை செய்யுறாங்க. லோக்கல் வருவாய்த்-துறைதான் இதைக் கவனிக்கனும். ஆனா மாட்டு வண்டி-க்காரங்கக்கிட்ட அதிகாரிகள் சம்திங் வாங்கிக்கிட்டு வண்டியை விட்டுடுறாங்க. லாரி, டிராக்டர்னு வச்சு அரசியல்வாதிகள் வைகை ஆற்றில் உள்ள மணலை எல்லாம் கொள்ளையடிச்சு கோடி கோடியாகச் சம்பாதிச்-சுட்டாங்க. இப்ப ஆத்துல மணல்ங்கிற அடை-யாளமே இல்லை. வெறும் களிமண்தான் இருக்கு.

வீடுகளுக்கு பைப்புகளில் வருகிற குடி தண்ணீர், மழை நேரங்களில் சாக்கடை கழிவு கலந்துதான் வருது. அதோட இல்லாம நிலத்தடி நீர்மட்டம் ரொம்பக் கீழே இறங்கிப் போயிட்டதால வேதிப்-பொருள்கள் கலந்த தண்ணீராகத்தான் பூமியில் இருந்து கிடைக்கிறது. இதனால் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கு. வைகை ஆற்றுப் படுகையில் இருக்கக் கூடிய பெப்சி, கொக்கோ கோலா மினரல் வாட்டர் கம்பெனிகளும் ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார்கள்.

1956-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் மூன்று கோடி ரூபாயில் விரகனூர் அணை கட்டப்-பட்டது. வைகையைச் சுற்றி நிறைய நன்செய் நிலங்களும், 14 பாசனக் கால்வாய்களும் இருந்தது. அவைகள் எல்லாம் இப்போது அடுக்குமாடி வீடுகளாக மாறிவிட்டது. கொலை, கொள்ளை, கஞ்சா, விபசாரம் என கிரிமினல் நடவடிக்கைகளின் கூடாரமாக வைகை ஆறு மாறிவிட்டது. இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சின்னு பட்டயம் வாங்கிய மதுரை மாநகராட்சி, வைகை ஆற்றை சீரமைக்க சுகாதார சீர்கேட்டில் இருந்து அதைக் காப்பாற்ற எந்த நடவடிக்கை-யும் எடுக்கவில்லை” என்கிறார் வழக்கறிஞர் பினைக்காஸு.

“வைகை ஆற்றை நம்பி மதுரை, திருப்புவனம், மானா-மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மணல் கொள்ளை-யால் வைகைக்கு வரும் தண்ணீர் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ள இடங்களி-லேயே தேங்கி-விடுகிறது. ராமநாதபுரம் கண்மாய் வரை வைகை நதி நீர் பாய்வது என்பது எட்டாக் கனியாக இருக்கிறது. கேரளா-வில் மணல் அள்ள தடை விதிக்கப்-பட்டுள்ளது. அதனால்-தான், தமிழ்நாட்டில் இருந்து கேரளா-விற்கு தமிழக அரசியல்-வா-தி-களால் ஏற்றுமதி செய்யப்-படுகிறது” என்கிறார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞரு-மான ராபர்ட்.

இனிவரும் தலைமுறை-களுக்கு ஆற்று நீரைப் பார்க்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் அளவிற்கு வைகை சீர்கெட்டுப் போய்விட்டது.

வைகை ஆறு இந்த அளவுக்குச் சீரழிந்து பாழடைந்து போய்விட்டதே? மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ன திட்டம் இருக்கிறது? என்ற கேள்விகளை மதுரை மாநக-ராட்சி மேயர் தேன்மொழி கோபி-நாதனிடம் முன்வைத்தோம். “வைகை ஆற்றை சீரமைப்-பதற்கான எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை. (இப்படி வெளிப்படையாகப் பேசிய மேயரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்!) கழிவுநீரை வெளி-யேற்றுவதற்காக அவனி-யாபுரம் அருகே வெள்ளக்கல் பக்கம் கழிவுநீரை திருப்பிவிட்டிருக்-கிறோம். இதற்காக 75 கோடி ரூபாய் செலவில் திடக்-கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்-படுத்தியிருக்கிறோம். அதுபோக மழைநீர் வடிகால் திட்டத்திற்காக 251 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வேலை நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.




*





பாலா



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!