யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
-சிக்கித் தவிக்கும் திண்டுக்கல் வனத்துறை

ஒரு யானையின் மரணத்துக்கும், ஒரு சாமானியனின் மரணத்துக்கும் விடை தெரியாமல் தவிக்கிறார்கள் திண்டுக்கல் மாவட்ட மக்கள்.
யானை மீது ஆசிட் ஊற்றி முழுத் தந்தங்களையும் அப்படியே உருவிய உண்மையான குற்றவாளிகள் யார்?
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை வளையத்-துக்குள் இருந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மர்ம மரணத்துக்குக் காரணம் யார்?
இந்த இரண்டுக்கும் விடை தேட கட்டுரைக்குள் போவோமா..?
முதுமலைக்கு அடுத்து காட்டுயானைகள் அதிகமாக இருப்பது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்தான். கோடைகாலங்களில் உணவுக்கும் தண்ணீருக்கும் பஞ்சம் வரும் நிலையில் காட்டு யானைகள் மலை அடிவாரங்களை நோக்கிப் படையெடுப்ப-துண்டு. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் பழனி வனப்பகுதிக்குட்பட்ட கொடைக்-கானல் மலை அடிவாரமான தேக்கந்-தோட்டம் பகுதியில் மேலிருந்து கீழிறங்கிய யானைகளில் ஒன்று மட்டும் தட்டுத்தடுமாறி கீழேயே நின்றுவிட்டது. அதைப் பயன்-படுத்திக்கொண்ட, கொடூர மனத்தினர், யானையின் மீது ஆசிட்டை ஊற்றி முழுத் தந்தங்கள் இரண்டையும் அப்படியே உருவியிருக்கிறார்கள்.
இத்தகவல் வனத்துறை அதிகாரி-களுக்குத் தெரியவர, யானையின் உடலை பிரேதப் பரிசோதனைக்குப்-பின் அடக்கம் செய்துவிட்டு, அந்த வனப்பகுதியில் இருந்த மாயி, முருகன், நொச்சி, ராமன், பொன்னுச்சாமி என்று காட்டுக்-குள் விறகு வெட்டுபவர்கள், ஆடு மேய்ப்பவர்களை எல்லாம் விசாரணைக்கு அழைத்திருக்கிறது வனத்துறை. இவர்களிடம் கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக விசாரித்த வனத்துறை, அந்தோணிமுத்து என்பவரை மட்டும் விடாமலே துரத்தியிருக்கிறது.
யானையின் மரண நிகழ்வு நடந்து ஒன்றரை மாதமாகியும் அந்தோணிமுத்துவை விடாமல் தினம் தினம் விசாரணைக்கு அழைத்துச்செல்வதும் விடுவது-மாக இருந்த நிலையில், ஜூன் 16-ம் தேதி அந்தோணி, அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துக்-கிடந்தார். அந்தோணிமுத்து, பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், தேக்கந்தோட்டம் மலை அடிவாரத்தில் ஆடு மேய்க்கும் ஷெட்டிலேயே குடும்பம் நடத்தி வந்தார். என்ன நடந்தது, எப்படி இறந்தார்? என்று அவரது மனைவி எலிசபெத்திடம் கேட்டோம்.
“இரண்டு மாசத்துக்கு முன்னாடி தண்ணீர் டேங்குக்கு மேல ஒரு யானை செத்துப்-போனது. அதைக் கண்டுக்-கவே இல்ல ஃபாரஸ்ட் அதிகாரிங்க. அதை எங்க ஆளுக பாத்துட்டுப் போய் சொல்ல, அப்புறம் வந்து யானைய புதைச்-சாங்க. யானை மீது ஆசிட் ஊற்றி தந்தம் உருவுன சம்பவத்துல, விசாரணைக்காக எங்க வீட்டுக்காரரோட ஏழெட்டுப் பேரை கூட்டிட்டுப்போய் விசாரணை செஞ்சாங்க. ஒரு வாரமா காலையில கூட்டிட்டுப் போவாங்க. சாயந்தரம்தான் விடுவாங்க.
அப்புறம் எங்க வீட்டுக்காரரோட செல் நம்பரை வாங்கிட்டுப் போய் தினமும் போன் பண்ணி ‘யானைய கொன்னது யாரு? உனக்குத் தெரியும் சொல்லு’ன்னு தொந்தரவு செஞ்சாங்க. செல்போனை எடுக்கலைன்னா அந்த வாட்சர் முனியாண்டியும், சேது என்ற ஆளும் வீட்டுக்கே வந்து, மிரட்டி கேட்பாங்க.
ஜூன் 11-ம் தேதி அன்னிக்கி வாட்சர் முனியாண்டியும் சேதுவும் வீட்டுக்கு வந்து, ‘அந்தோணி எங்கே?’ன்னு எங்கிட்ட கேட்டாங்க. ‘ஆடுமேய்க்கப் போயிருக்காரு’ன்னு சொன்னேன். ஆடு மேய்க்கிற இடத்துல போய் அவரை மிரட்டி இருக்காங்க. அவரும் காலில் விழுந்து ‘எனக்கு எதுவும் தெரியாது என்னை விட்டுடுங்க’ன்னு சொல்லி இருக்கார்.
அடுத்த இரண்டு நாள் வெளியூர் திருவிழாவுக்குப் போயிட்டோம். அங்கேயும் விடாம போன்ல தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தாங்க. ஞாயித்துக்கிழமை வந்ததும் ‘ஏண்டா செல்போனை எடுக்கமாட்டியா’ன்னு மிரட்டு-னாங்க. முனியாண்டியும் ஒரு ஆபீசரும் வந்து வீட்டுப் பக்கத்துல தனியா கூட்டிக்கிட்டு போய் விசாரிச்சாங்க. ‘உண்மையைச் சொல்லிரு... இல்லைன்னா, விஷத்தைக் குடிச்சி செத்துடு’ன்னு சொல்லி மிரட்டினாங்க. செவ்வாய்க்-கிழமை காலையில வேலைக்குப் போயிட்டு பதினொரு மணிக்கு வந்தேன். வந்து பார்த்தபோது என் உடம்பு ஆடிப்-போச்சு. உயிர் நாடியில அடிச்சு எம்புருசனை கொன்னு போட்டாங்க அந்த ஃபாரஸ்ட்காரங்க” என்று சொல்லி அழுதார் எலிசபெத்.
அந்தோணிமுத்துவின் சகோதரர் அருள் ஜேசு,“யானை செத்த நாலுநாளைக்கப்புறம் என் தம்பியை விசாரணைக்குக் கூப்பிட நானும் போனேன். அடிக்காம விசாரிச்சாங்க. ஆனா, அந்தோணிகூட போன மாயி, முருகன்,நொச்சிக்கு எல்லாம் நல்ல அடி விழுந்தது. யானைய இவங்க கொன்னுட்டதா சொல்லி விசாரிக்கிறாங்க. யானை செத்து இரண்டு மூணு நாளைக்கு அப்புறம் விறகு வெட்டப்-போறவங்க சொல்லித்தான் ஃபாரஸ்ட்டுக்கே தெரிஞ்-சிருக்காம். அதுவரைக்கும் ஃபாரஸ்ட் அதிகாரிகளுக்குத் தெரியலயாம்.
வாட்சர், கார்டு எல்லாம் தினமும் போய்வர பகுதியிலதான் நடந்-திருக்கு. எப்படித் தெரியாம போகுமுன்னுதான் கார்டு, வாட்சருன்னு அஞ்சு பேரை சஸ்பெண்ட் செஞ்சிட்-டாங்க. ஆசிடை ஊத்தி தந்தத்தை உருவும் வழி-யெல்லாம் இவனுகளுக்குத் தெரியுமா? ஃபாரஸ்ட்-காரங்களுக்குத் தொடர்-புடைய ஆட்கள்தான் செஞ்சிருப்-பாங்கன்னு அந்ததோணிக்-குத் தெரியும் போல. இவன் உண்மை-யைச் சொல்லிடுவானோன்னு விசார-ணைங்-கிற பேருல, அந்தோணியை அடிச்சே கொன்னுட்டாங்க. அந்தோணிமுத்து செத்துக் கிடந்ததைப் பார்த்தா நமக்கே உயிர் போயிடு-முங்க. உயிர்நாடி எல்லாம் வீங்கி, மலம் வெளியே வந்து கோரமாக் கிடந்தான். விஷம் குடிச்சு செத்தா இப்படியா இருக்கும்?” என்றார் அவரது சகோதரர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “யானையைக் கொன்று தந்தம் எடுத்ததற்காக போஸ், பாண்டி, பல்லாகான் என மூன்று பேரை ரிமாண்ட் செய்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. அந்தோணி அந்தக் காட்டுப் பகுதியில் இருக்கறதால தந்தம் எடுப்பவர்கள் யார்? பிடிபட்டவர்களின் கூட்டாளிகள் யாரையாவது தெரியுமா? என்று விசாரிச்சோம். அந்தோணி எங்களுக்கு இன்பார்மர். அவனை எப்படி நாங்கள் அடித்துக் கொல்வோம்? அவனோட இழப்பு எங்களுக்-கும் இழப்புதான்” என்றார்கள் அவர்கள்.
மாவட்ட வன அதிகாரிகளிடம் பேசிய-போது, “அந்தோணியின் மரணத்திற்கு முனியாண்டி மற்றும் சிலர் காரணம்னு, புகார் வந்திருக்கு. யானையைக் கொன்று தந்தம் உருவி-யதைப் பற்றி முழு-விசாரணை முடிந்தவுடன், குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் கண்டிப்பாகத் தண்டிக்கப்-படு-வார்கள்” என்றனர்.
யானையைக் கொன்ற குற்ற-வாளி-களை பிடித்ததாக அதிகாரிகள் சொல்-கிறார்கள். அப்புறம் எதுக்கு அந்தோணியை மேலும் மேலும் விசாரித்தார்கள் என்பது தெரிய-வில்லை. பிடிபட்ட குற்றவாளி-களையே விசாரித்தால், அவரது கூட்டாளிகளை கண்டுபிடித்து-விட-லாமே? எல்லா உண்மை-களையும் தெரிந்த அந்தோணிமுத்து இருந்தால் பிரச்னை என்று, வனத்-துறையினரே கொன்று-விட்டார்கள் என்று அவரது உறவினர்கள் சொல்லும் கருத்தை அவ்வளவு எளிதில் புறக்-கணிக்க முடியவில்லை.
*
‘
சி.கார்த்திக்
|