முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
-ஏக்கத்தில் எகிறும் தொழிலாளர்களின் லப்-டப்!




வண்டிச்சக்கரம் உருண்டோட டயர் தேவை. அதுபோல் வாழ்க்கைச்சக்கரம் உருண்-டோட நிதி தேவை. அந்த நிதி கிடைக்காமல், ஆலையும் மூடப்பட்டு, வேலையும் இல்லாமல் சுமார் ஐநூறு தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். அதுவும் வருடக்கணக்கில்! புகழ்பெற்ற ‘டன்லப்’ டயர் தொழிற்சாலையில்தான் இந்த அவலம்.

1998 -ம் ஆண்டு முதல் ‘டன்லப்’ தொழிற்சாலை சென்னை அம்பத்தூரில் இயங்கி வந்தது. கடந்த 2006-ம் ஆண்டு இத்தொழிற்சாலை திடீரென்று மூடப்பட்டுவிட்டதால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் தங்களின் கிராஜுவிட்டி, மற்றும் பிராவிடண்ட் ஃபண்ட் பணம் கிடைக்காமல் வேதனையில் இருக்கின்றனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததால் அத்தொழிற் சாலையில் பணிபுரிந்த தொழிலாளியும், பழம்பெரும் தமிழறிஞர் திரு.வி.க.வின் நெருங்கிய உறவினருமான பாஸ்கரனிடம் பேசினோம். “டன்லப் டயர் கம்பெனி நிர்வாகம் ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கப்பட்டபோது அதன் உரிமை-யாளர் ருயா பத்திரிகையாளர்களையும், எங்களையும் அழைத்துப்பேசினார். ‘தொழிலாளர் குடும்பத்தைத் தன் குடும்பமாகப் பாவிப்பேன் என்றும், தொழிலாளர்கள் ஓய்வுபெற்றால் ஓய்வுபெற்றவர்களின் சந்ததியினருக்-கும் வேலை கிடைக்கச்செய்வேன் என்றும், நான் கொடுக்கும் சம்பளம் போதுமானதாக இருக்காது. என் தாயுடனும், மனைவியுடனும் வந்துள்ளேன். கடவுள் மீது நம்பிக்கை உடைய நான், வேறு எந்த விதத்திலும் தொழிற்சாலையை விற்கவோ, தவறான வழிமுறைகளைப் பின்பற்றவோ மாட்டேன்’ என்றும்கூறி, எங்களை நம்ப வைத்தார்.

ஆனால் கம்பெனி கடந்த 2006-ம் ஆண்டிலேயே மூடப்பட்டுவிட்டது. அவ்வப்போது திறப்பார்கள். ஒரு வாரம் கழித்து மீண்டும் பூட்டி விடுவார்கள்.இப்படியே இன்றுவரை காலம் ஓடிவிட்டது. நாங்கள் கேட்பதெல்லாம் கல்கத்தாவிலும், மைசூரிலும் லாபகரமான முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் புகழ்பெற்று, லாபகரமாக இயங்கிவந்த சமயத்தில், திடீரென்று மூடப்பட வேண்டிய அவசியம் என்ன? சரி! மூடிவிட்டார்கள். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை ஏன் நிறுத்தி விட்டார்கள்? சுமார் இரண்டாயிரத்து நாநூறு தொழிலாளர்கள் இருந்த நிலை மாறி, தற்போது ஐநூறு தொழிலாளர்களாகி விட்டனர். இந்த நிலை தமிழகத்தில் மட்டும்தான். ஆனால் கல்கத்தாவில் பணிபுரியும் தொழிலாளர்-களிடம் நேரடியாகச்சென்று கேட்டபோது சம்பளமும், சலுகைகளும் சரியான முறையில் கிடைப்ப-தாகத் தெரிவித்தார்கள். எப்படி இருந்தாலும் மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். முடக்கப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு தொழிலாளர்களின் துயர் துடைக்கப்படவும் வேண்டும்!” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

ராஜேஷ்கண்ணன் என்ற இன்னொரு தொழிலாளி, பேசும்போது, “தொழிலாளர்-களின் மூலதனத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிதியை நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளது. ஆனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் இன்றுவரை கிடைக்கவில்லை. இந்தச்சங்கம் முழுக்க முழுக்கத் தொழிலாளர்-களின் சொந்தப்-பணத்தில் இயங்கக்-கூடியது என்று அரசுப் பதிவேட்டில் இருக்கிறது. (இச்சங்கத்தின் பதிவு எண் 3030) ஸ்ரீபெரும்-புதூர் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி இதன் தலைவராக உள்ளார். அவரின் தந்தைகூட கடுமை-யான உழைப்பாளியாக இதே தொழிற்-சாலையில் பணியாற்றி இருக்கிறார். அவர் பல சமயங்களில் தொழிலாளர்--களிடையே பேசும்போது, ‘நிர்வாகத்-திடம் போராடி தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கு-வேன். வி.ஆர்.எஸ். அறிவிக்கப்பட்டால் அதிகபட்சம் ஐந்து லட்ச ரூபாய் பெற்றுத்தருவேன்!’ என்றும் பலமுறை கூறி உள்ளார். ஆனால் சங்கத்தொழிலாளர் நலனில் அக்கறை காட்டாததால், சட்டரீதியான மேல் நடவடிக்கையை நிர்வாகத்தின் மீது எடுக்க முயற்சிக்க வில்லை.போராடவும் இல்லை. இதில் சாபக்கேடான விஷயம் என்ன-வென்றால், அம்பத்தூர் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட எந்த அரசியல் கட்சியும் தொழிற்-சாலை இயங்காதது குறித்துப் பேசவே இல்லை!” என்று வருத்தப்பட்டார்.

நாம் உடனே ‘டன்லப்’ தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் தி.மு.க. எம்.பி.யுமான கிருஷ்ணசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “ருயா வருவதற்கு முன்பா-கவே நான் தொழிற்சங்கத் தலைவராகிவிட்டேன். பிறகு ருயா வந்தார்.

ஒப்பந்தம் போட்டோம். விருப்ப ஓய்வுபெற்றுச் சென்றவர்கள் முந்நூறு நபர்களுக்கு எல்லா-வித-மான செட்டில்-மென்ட்-டையும் வாங்கித் தந்தேன். ஆறு மாதங்களுக்கு முன் திடீரென்று, ‘கம்பெனியை என்னால் நடத்த முடியவில்லை’ என்று கூறி மூடி விட்டார் ருயா. இதனால் ஒரு தொழிலாளிக்கு இழப்பீடாக ஐந்து லட்ச ரூபாய் வழங்குவதாக ஒப்பந்தம் போட்டது நிர்வாகம். ஆனால் தற்போது ஒரு தொழிலாளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே தருவோம் என்று மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள்.

இடையில் என்னை மீண்டும் தொடர்பு கொண்ட ருயா, பேங்கில் லோனுக்கு விண்ணப்பித்துள்ள-தாகவும், விரைவில் கம்பெனியை மீண்டும் திறப்பேன் என்றும் முன்னுக்குப்பின் முரணாகக்கூறி வருகிறார்!” என்று மட்டும் தெரிவித்தார்.

நாம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் ஜெனரல் மேனேஜர் ‘லயனர்’சுரேஷை சந்திக்க ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை அலுவலகத்திற்கு நேரில் சென்ற-போது, அலுவலகத்தில் பூட்டு தொங்கியது. நம்மை யார் என்று விசாரித்த ஒருவரிடம் சுரேஷின் செல் நம்பர் கேட்டதும், “கம்பெனியே மூடியாகிவிட்டது. இனி நம்பர் கேட்டு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கூறிவிட்டு, அவரது வேலையைப்பார்க்கத் தொடங்கினார்.

டன்லப் டயர் கம்பெனி நல்ல லாபத்துடன் இயங்கி வந்த தரமான, பாரம்பரியமிக்க ஆலை. இந்தியாவின் முதல் டயர் கம்பெனி என்ற இன்னொரு நற்பெயரும் அதற்கு இருக்கிறது. இப்போதுகூட ‘டன்லப்’ டயர் நாடெங்கும்-விற்பனையில் கொடி-கட்டிப்பறக்கிறது. அப்படிப்-பட்ட கம்பெனியின் சென்னை கிளையில் உழைக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா? என்பதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் யோசித்துப்-பார்ப்பது நல்லது.

*





ஜி குமரகுரு



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!